エピソード

  • UK போலவே, ஆஸ்திரேலியாவிலும் வாக்குரிமை வயதை 16 ஆக குறைக்க வேண்டிய அவசியமுள்ளதா?
    2025/07/24
    UK-வில் தற்போது வாக்களிக்க தகுதியான குறைந்தபட்ச வயதை 16 ஆக குறைக்கும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. UK போன்று இளைய தலைமுறையின் வாக்கு உரிமையை குறைக்க ஆஸ்திரேலியா தயங்குவது ஏன்? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    9 分
  • NSW போக்குவரத்துத் துறையில் சுமார் 950 பணியிடங்கள் நீக்கம்
    2025/07/24
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 24/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
    続きを読む 一部表示
    5 分
  • Fear, vigilance and polarisation: How antisemitism is impacting Jewish Australians - SBS Examines : ஆஸ்திரேலியாவில் நிலவும் யூத விரோதம் எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது?
    2025/07/23
    Many in Australia’s Jewish community say political polarisation is fuelling a new wave of antisemitism. How are Jews responding in the face of high-profile incidents of hate? - 'வெறுப்பை புரிந்து கொள்வது' என்ற இந்த தொடரில், இன்றைய ஆஸ்திரேலியாவில் யூத விரோதத்தின் தாக்கத்தை நாம் ஆராய்கிறோம்.
    続きを読む 一部表示
    7 分
  • தீர்வுகள் ஏதுமின்றி தொடரும் காணமலாக்கப்பட்டோர் பிரச்சினை
    2025/07/23
    இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் யுத்த காலப்பகுதியில் அதற்கு பின்னரும் வலிந்துகாணாமலாக்கப்படடோர் விவகாரத்திற்கு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. இந்த பின்னணியில் வடக்கு - கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா அவர்களுடன் உரையாடுகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
    続きを読む 一部表示
    10 分
  • உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?
    2025/07/23
    விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    3 分
  • செம்மணியில் மீண்டும் மனித புதை குழிகள்: நியாயம் கேட்கும் குரல்கள்
    2025/07/23
    வட இலங்கையின் அமைதியான கிராமமான செம்மணி, சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகளால் மீண்டும் சர்வதேச ஊடகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 1990களின் இறுதியில் இவ்விடத்தில் முதல் முறையாக கிடைத்த புதை குழிகள், இலங்கையின் உள்நாட்டுப் போரின் அடக்கு முறைகளை உலகுக்கு வெளிச்சமிட்டிருந்தன – கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வரலாற்றின் இருண்ட கட்டங்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செம்மணி மீண்டும் கவனத்துக்கு வருகிறது. இம்முறை, எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கட்டுமானத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 65ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சில பச்சிளம் குழந்தைகளுக்குரியவை – பாடசாலைப் பைகள், பொம்மைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், பல வருடங்களாகப் பதில்கள் இல்லாமல் காத்திருக்கின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் புலம்பெயர் சமூகங்கள், இந்த விவகாரம் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. செம்மணி, தீராத காயங்களை நினைவூட்டும் இடமாகவும், வரலாற்று பொறுப்புக்கூறலைக் கோரும் சமூகத்தின் கூட்டு நினைவாகவும் நிற்கிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    16 分
  • கன்பராவில் பழமையும் புதுமையும் ஒன்றிணையும் 48-வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!
    2025/07/23
    லேபர்க் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் 48வது நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதில் சுமார் 40 அரசியல்வாதிகள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    7 分
  • 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயதான தொழிலாளர்கள் - ஆய்வு முடிவு
    2025/07/23
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
    続きを読む 一部表示
    5 分