-
サマリー
あらすじ・解説
பேய்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? ..... ராகுல் என்ற 23 வயது இளைஞன் சென்னையில் எக்சிபிஷன் பேய் வீடு ஒன்றை நடத்தி வந்தான். தன் அம்மா அப்பா மர்மமான விதத்தில் காணாமல் சென்றபிறகு தன் அப்பாவின் கனவான horror house-க்கு பொறுப்பேற்றிருந்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அந்த பேய் வீட்டை லாபகரமாக நடத்த முடியவில்லை. வாழ்க்கையே வெறுத்து இருந்த அவனுக்குத் தன் தந்தையின் அலமாரியிலிருந்து கிடைத்தது ஒரு அமானுஷ்ய போன். அதில் காத்து இருந்தது ஒரு பேரதிர்ச்சி.. அமானுஷ்யமான, ஆபத்தான, டாஸ்க்கள் அந்த போனில் இருந்தது.. Blue whale கேம் போன்று இருந்த இந்த விபரீத விளையாட்டை தொடர வேண்டாம் என்று ராகுல் நினைத்த பொழுது அந்த போனில் இருந்து கேட்டது அவன் அப்பாவின் குரல்!!! என்ன செய்வான் ராகுல் ? உயிரை துச்சமென மதித்து இந்த விபரீத விளையாட்டை விளையாடி தன் தந்தையை மீட்பானா? அந்த அமானுஷ்ய போன் பற்றிய உண்மை என்ன? ராகுலின் தந்தைக்கு இதில் என்ன சம்மந்தம்? ராகுல் உண்மையில் பேய்களை சந்திப்பானா? தெரிந்த கொள்ள கேளுங்கள் " விபரீத விளையாட்டு "
activate_buybox_copy_target_t1