-
サマリー
あらすじ・解説
18 வருடத்துக்கு முன், ஓர் மஹாளய அமாவாசை. அப்பொழுது நள்ளிரவில் ஒரு அழகிய பெண்ணை மூன்று ஊர் தலைவர்களும் 30 பேர் கொண்ட முரட்டு ஆண் கூட்டமும் சேர்ந்து தர தரவென இழுத்து வந்து மேகமலையின் ஊர் நடுவே ஓர் ஆலமரத்தில் கட்டி வைத்து எந்த வித காரணமும் சொல்லாமல், அவளின் கதறலையும் கெஞ்சலையும் கூட பொருட்படுத்தாமல் எரித்து கொன்றனர். அந்த பெண் இறக்கும் தருணத்தில் கூறிய ஒரே சொல் சாது. அதிலிருந்து ஊர்முழுவதும் துர் மரணங்களும் கெட்ட சம்பவங்களாகவும் நிகழ.. அவளை கொல்வதற்கு காரணமாக இருந்த அனைவரையும் அவள் தேடி பழி வாங்குகிறாள் என்று அனைவரும் நம்புகின்றனர். மேகமலை ஊர் தலைவரின் மகன் ரகு, திருமணத்துக்காக ஊருக்குள் வருகிறான். ரகு மற்றும் அவன் நண்பர்கள் இந்த ஊரில் நடக்கும் அனைத்தையும் வேடிக்கையாகப் பார்க்க.. இவர்கள் வருகையை ஒட்டி நடக்கும் திடுக்கிடும் நிகழ்வுகளும், அமானுஷ்ய சம்ப்பவங்களுமே மேகமலை ரகசியம்...
activate_buybox_copy_target_t1